Comments

வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவி மகன் கடத்தல்: நான்குநாள் நாடகம் முடிவுக்கு வந்தது.




பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ஊராட்சி தலைவர் நூருல்ஹுதா(40). இவரது மகன் ஜலாலுதீன்(21). கோவையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். கடந்த 10ம் தேதி ஜலாலுதீன் ஊரில் இருந்து கோவைக்கு சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகவும், கடத்தியவர்கள் போன் செய்து தனது ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் அவரது தாய் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஜலாலுதீனை தேடி வந்தனர். நேற்று சேலம் பஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த ஜலாலுதீனை மீட்டு பெரம்பலூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது ஜலாலுதீனே கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. ஜலாலுதீன் கூறுகையில், ‘எனது தாய் ஊராட்சி தலைவராக இருப்பதால் பலரும் குறை கூறி வருகின்றனர். இதனால் அவரை ராஜினாமா செய்யும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. இதனால் நானே அவருக்கு குரலை மாற்றி பேசி கடத்தப்பட்டதாக நாடகமாடி, அவரை ராஜினாமா செய்ய கூறினேன். இப்போது போலீசில் மாட்டிக் கொண்டேன்’ என்றார்.



 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.