Comments

ஊர்செய்தி


கடத்தப்பட்ட மகனை மீட்க பஞ்சாயத்து தலைவி ராஜினாமா





பெரம்பலூர்: மகனை கடத்திய, கடத்தல்காரர்களின் மிரட்டலால், பெண் பஞ்சாயத்து தலைவர், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி நூருல்ஹீதா. இவர் வி.களத்தூர் பஞ்சாயத்து தலைவராகவும், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது மகன் ஜலாலுதீன், 19. இவர் கோவையில், இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த, 11ம் தேதி, இவர் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமென்றால், நூருல்ஹீதா, பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, மிரட்டப்பட்டார்.
நேற்றும் மிரட்டல் வந்துள்ளது. தொடரும் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த ஜலாலுதீனின் தாயார் நூருல்ஹீதா, தன் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். நேற்று காலை, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அகமதை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கடத்தப்பட்ட ஜலாலுதீன் , நேற்று இரவு வரை விடுவிக்கப்படவில்லை.




About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.