Comments

இந்தியா

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படங்களை இணையத்தில் பகிர்ந்ததினால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது


மத்திய பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை கேலி செய்யும் படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்தமைக்கு இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோகன் பகாவத்தின் உடல் ஒரு பெண்ணின் கால்களோடு பொருத்தப்பட்டது போன்று அமைந்துள்ளது அந்த படம். ஆர்.எஸ்.எஸ். அரை டிரவ்சரில் இருந்து பேண்டுக்கு மாறியதை கேலி செய்யும் வகையில் அந்த படம் அமைத்துள்ளது.
இது குறித்து மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மத்திய பிரதேச அரசு அந்த இளைஞர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடும்படி கூறியுள்ளது.

ஷாகிர் யூனுஸ் மற்றும் வாசிம் ஷேய்க் ஆகிய இரு இளைஞர்கள் மீதும் இந்துத்வா அமைப்பினர் சிலர் புகாரளித்துள்ளனர். அதில் இவர்கள் பகிர்ந்த அந்த படம் அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். இவர்கள் மீது ஐ.டி சட்டப் பிரிவு 67 (“publishing or transmitting obscene material in electronic form”) மற்றும் ஐ.பி.சி. பிரிவு 505(2) (“promoting enmity, hatred or ill-will between classes”) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு வார நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களின் மேல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு காலம் வரை சிறையில் அடைக்கப்படுவர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பிரச்சாரகர் அபிர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “ஒருவரை கேலி செய்தார் என்பதற்காக கைது நடவடிக்கை எடுப்பது என்பது சற்று கூடுதாலக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் ஐ.டி பிரிவின் 66A வை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. மத்திய பிரதேச காவல்துறை இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது வருத்தத்திற்குரியது” என்று அவர் கூறியுள்ளார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.