Comments

உலக செய்தி

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்பால் ஒரு போதும் ஜெயிக்க முடியாது: சவுதி இளவரசர் அல்வாலீத்,

துபாய்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அதில், குடியரசுக் கட்சி தரப்பில், அமெரிக்காவின் மிகப்பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், போட்டியிடுகிறார். இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் புகுந்து, முஸ்லிம் தீவிரவாத தம்பதி நடத்திய தாக்குதலில், 14 பேர் பலியானார்கள். இச்சம்பவத்திற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ‘‘முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக்கூடாது’’, என, சர்வதேச அரங்கில் சர்ச்சை ஏற்படும் விதமாக கருத்து தெரிவித்தார். டிரம்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சவுதி இளவரசர் அல்வாலீத், ‘‘குடியரசுக் கட்சியை மட்டுமன்றி, ஒட்டு மொத்த அமெரிக்காவையும் டிரம்ப் அவமதித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்பால் ஒரு போதும் ஜெயிக்க முடியாது.


எனவே, போட்டியில் இருந்து விலக வேண்டும்’’ என கூறியுள்ளார். இளவரசரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள டிரம்ப், ‘‘உலகிலுள்ள முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியாதான் அவமதிப்பாக உள்ளது’’ என்று ட்வீட் செய்துள்ளார். அலங்கார விளக்குகள், கண்ணாடி, நகை என மத்திய கிழக்கு நாடுகளில் பல தொழில்களை நடத்தி வரும் டிரம்ப், சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ளதால், தொழிலில் பலத்த சரிவை சந்தித்து வருகிறார். பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கோல்ப் விளையாட்டு அரங்கம் திட்டத்தில் பங்குதாரராக இருக்கும் டிரம்ப்பை, நீக்கி விட்டதாக துபாய் நிறுவனம் அறிவித்துள்ளது

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.