Comments

ஊர்செய்தி

வி.களத்தூர் ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 
விசுவக்குடி அணை

 பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடியில் பச்சைமலை-செம்மலை இடையே கட்டப்பட்டுள்ள புதிய அணைக்கு பச்சைமலை, செம்மலையில் இருந்து ஏறக்குறைய 5.61 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் கல்லாற்று நீரோடை வழியாக இந்த அணைக்கு வந்து அடைந்தது.

நீர்மட்டம் உயர்வு:

33.7 அடி உயரம் கொண்ட விசுவக்குடி அணையில் 29-ந்தேதி  நீர் வரத்து உயர்ந்துள்ளது. பச்சைமலை, செம்மலையில்  வடகிழக்கு பருவமழை பெய்த  காரணத்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது  அணையின் நீர்மட்டம் உயர்வாழ் அணையின் நீர் மட்டத்தை சரிசெய்யும் விதமாக அருகில் உள்ள ஆற்றில்  தண்ணீர் திறந்து விட பட்டு  உள்ளது.

இதனால் வி.களத்தூர் கல் ஆற்றில் மீண்டும் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள வெண்பாவூர்,  வடகரை, N.புத்தூர்  கிராமம், பிம்பலூர், வி. களத்தூர் , தைக்கால், அயன் பேரையூர்  பகுதிகளில் கரையோர மக்களுக்கு ஆற்றில் இறங்கி செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.
இதனால் நமது ஊர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அது சமயம் நமது குழந்தைகள் ஆற்று பகுதிக்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஆற்றில் இறங்கவோ, குளிக்வோ வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்..













About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.