Comments

தமிழக செய்திகள்

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு..!

 
பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான இணையவழிக் கலந்தாய்வு மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு மே மாதம் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறுவதன் மூலம், அந்தக் கல்வியாண்டில், கலந்தாய்வில் தேர்வு செய்யும் பள்ளிகளுக்குச் செல்வது எளிது.
 
மேலும் அந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே மாத...ிரியான முறையில் கற்பிக்க முடியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு தகுந்தவாறு பாடங்களை தெளிவாக நடத்தவும் முடியும்.
 
ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கானக் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு இணைப்பில் உள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் இயங்கும் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்: 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். 16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.

18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.

12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.

 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.