Comments

தமிழக செய்திகள்

'தூய்மை இந்தியா' திட்டத்தில் திருச்சி 2ம் இடம் பிடித்து சாதனை..!

 கல்வித்துணைவன் தமிழ்நாடு's photo.

நாட்டில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை அமல்படுத்துவதில், மைசூரூ நகரம் முதலிடத்தையும், திருச்சி, இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணப்படி, 'துாய்மை இந்தியா' திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும், 476 நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள நக...ரங்களில் மட்டுமே, கணக்கெடுப்பு நடந்தது.
அதில், டாப்-10 பட்டியலுக்குள் இடம் பெற்ற நகரங்கள் பின்வருமாறு:-
1. மைசூர் (கர்நாடகா)
2. திருச்சிராப்பள்ளி (தமிழகம்)
3. நவி மும்பை
4. கொச்சி (கேரளா)
5. ஹாசன்
6. மாண்டியா
7. பெங்களூரு (கர்நாடகா)
8. திருவனந்தபுரம் (கேரளா)
9. ஹாலிசாகர் (மேற்கு வங்காளம்)
10. கேங்க்டாக் (சிக்கிம்)
இந்த பட்டியலில் தலைநகர் டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் 398-வது இடத்தில் உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் 25 நகரங்களுடன் டாப்-100-க்குள் இடம்பிடித்துள்ளது. தென் மாநிலங்களில் இருந்து 39 நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. கிழக்கிந்திய மாநிலங்களில் இருந்து 27 நகரங்களும், மேற்கு இந்திய மாநிலங்களில் இருந்து 15 நகரங்களும், வட இந்தியாவில் 12 நகரங்களும், வடகிழக்கு மாநிலங்களில் 7 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்த பட்டியலில் கர்நாடக மாநிலம் முன்னிலை வகிக்கிறது. பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கி 429-வது இடத்தில் உள்ளது. இதுதவிர, மத்திய பிரதேசம், ஒடீசா மாநிலங்களும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.