Comments

பொதுவானவை

'ப்ளாஷ்' போட்டு போட்டோ; கண் பார்வையை இழந்த 3 மாத குழந்தை..!

குழந்தைகள் இருக்கும் மற்றும் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!

blind flash 01
 
கேமிரா ப்ளாஷ் 'ஆன்' ஆகி இருப்பதை மறந்து போய், பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை 'க்ளோஸ்-அப்'பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர், ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..!15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள், மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டுள்ளது (கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதானால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்..!

blind flash 02
 
 
மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் கண்ணின் கருமணியை பாதித்து உள்ளது, அந்த பாதிப்பானது மத்திய பார்வையை இழக்க செய்துள்ளது என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இன்னும் இந்த ஆண் குழந்தைக்கு பெயர் கூட வைக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..!


 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.