Comments

வளைகுடா

ISIS போராளி தாக்குதலில் இருந்து சவுதியை காப்பாற்ற மன்னர் அப்துல்லாஹ்வின் பிரத்தியேக விமானத்தில் சந்திப்பு!!


ஈராக்கில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இயக்கம் அயல் நாடுகளை நோக்கி நகரத் தொடங்கியதில், கடும் பதட்டத்தில் உள்ளது சவுதி அரேபிய தலைமை. வருமுன் காப்போனாக தம்மை காத்துக்கொள்ள ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் அவர்கள்.



சவுதி மன்னர் அப்துல்லா, தாமே நேரடியாக காரியத்தில் இறங்கியுள்ளார்.
என்னதான் அமெரிக்காவின் பாதுகாப்பு தமக்கு உள்ளது என்ற போதிலும், தொலைவில் உள்ள அமெரிக்கர்களைவிட, அருகில் உள்ள அரேபிய நண்பர்கள் அருமையாக கை கொடுப்பார்கள் என நம்புகிறார் மன்னர்.
காரணம், அவர்கள் லோக்கல் நிலவரம் நன்கு புரிந்தவர்கள். மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளி இயக்கத்துக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பதை நன்கு புரிந்தவர்கள்.


ஐ.எஸ்.ஐ.எஸ் போராளி இயக்கத்திடம் இருந்து சவுதியை காப்பாற்றிக்கொள்ள, மன்னர் அப்துல்லா ராஜதந்திர ரீதியில் அணுகியுள்ள நாடு, ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியது. அந்த நாட்டு ஜனாதிபதியை, தமது பிரத்தியேக விமானத்துக்குள் (மேலே போட்டோ பார்க்கவும்) அழைத்து சந்தித்துள்ளார், சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல்அசீஸ்.
மன்னர் அப்துல்லா, சவுதியில் இருந்து தமது பிரத்தியேக விமானத்தில் புறப்பட்டபோது, அவர் மொரக்கோவில் உள்ள தமது கோடைகால அரண்மனைக்கு செல்வதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால், அவரது விமானம் மொரக்கோ செல்வதற்குமுன், மற்றொரு நாட்டின் தலைநகர விமான நிலையத்தில் இறங்கியது.


அந்த விமான நிலையம்-
கய்ரோ! எகிப்தின் தலைநகர விமான நிலையம்.


சுமார் அரை மணி நேரம் மன்னர் அப்துல்லாவின் விமானம் அங்கு நின்றிருந்தது. மன்னரின் அழைப்பையேற்று, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபாட்டா எல்-சிசி விமான நிலையத்துக்கு வந்திருந்தார். விமானம் தரையிறங்கியதும், விமானத்துக்குள் ஏறிய எகிப்திய ஜனாதிபதி, சுமார் 20 நிமிடங்கள் சவுதி மன்னருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு இறங்கினார்.
இதையடுத்து, எகிப்திய ராணுவ கமாண்டோ யூனிட்டுகளுக்கு ரெட்-அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நிமிடமும் சவுதி எல்லைகளுக்கு செல்ல, எகிப்திய ராணுவ கமாண்டோ யூனிட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


சவுதி மன்னரும், எகிப்திய ஜனாதிபதியும் நடத்திய 20 நிமிட பேச்சுவார்த்தையின்போது, எகிப்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான முழு செலவும் சவுதியால் கொடுக்கப்படும் என முடிவாகியதாக தெரிகிறது.
அத்துடன் மேலதிகமாக, எகிப்திய ராணுவத்துக்கான ஓராண்டு பட்ஜெட்டின், கணிசமான சதவீதத்தை சவுதி பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் கூறப்படுகிறது.


ஒரு காலத்தில் எகிப்திய ராணுவ பட்ஜெட்டை அமெரிக்கா ‘கவனித்து’ கொண்டது. அதன்பின் அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது, அமெரிக்கா கைவிட்டதில், கத்தார் எமிர் வழங்கிய உதவியுடன் ராணுவம் இயங்கியது. இப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் புண்ணியத்தில், சவுதி கைகொடுக்க முன்வந்துள்ளது.
எகிப்தில் சினாய் பகுதியில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் முஸ்லீம் சகோதரத்துவ சமூகம் இயக்கம் (Muslim Brotherhood), மற்றும் அல்-காய்தா ஆகியவற்றை முழுமையாக அடக்க முடியாமல் திணறும் எகிப்திய ராணுவம், சவுதி எல்லைகளை காக்க போவது, ஆச்சரியமாக ஏற்பாடுதான்!

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.