காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக 239 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களும் இருந்தனர். MH370 என்ற இந்த விமானத்தின் பயணிகளின் நிலைமை பற்றிய தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை.
மலேசிய விமான பயணிகள்: மலேசிய விமானம் மாயமாகி கிட்டதட்ட 26 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை கதிகலங்க வைத்துள்ளது.அதில் பயணம் செய்தவர்களைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியாத நிலையில் பயணம் செய்தவர்களின் பெயர்கள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றிய செய்திகள் மட்டும் வெளியாகி உள்ளன.
விமான பணியாளர்கள் 12 பேர்: மொத்தமாக 239 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 12 பேர் விமான பணியாளர்கள்.
5 இந்தியர்கள்: அதில் பயணம் செய்த இந்தியர்கள் சேத்தனா, ஸ்வானந்த், வினோத் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.மீதி இருவர் சந்திரிகாம் மற்றும் கிரந்தி.
குழந்தைகளும் அடக்கம்: இந்த பயணிகளில் அமெரிக்காவை சேர்ந்த "யான்" என்ற 2 வயது குழந்தையும், நிக்கோல்செட் என்ற 4 வயது குழந்தையும், "சிவன்செட்" என்கிற 3 வயது, "யின்ங்சின்சித்" என்ற 3 வயது, "மோகெங்" என்ற 2 வயது சீனாவைச் சேர்ந்த குழந்தைகளும் அடக்கம்.
திரும்பி வருவார்களா?: மீதி உள்ளவர்களில் முக்கால்வாசி பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.227 பயணிகள் மற்றும் 10 விமான சேவை பணியாளர்கள், 2 விமானிகளுடன் கூடிய இந்த விமானம் மாயமானதைப் பற்றி நாளுக்கு நாள் புரளிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களின் குடும்பத்தினர் நிலைமைதான் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
source:
மலேசிய விமானத்தைத் தேட 4 மில்லியன் டாலர் செலவழிக்கும் அமெரிக்கா
உலகுக்கே புரியாத புதிராய்ப் போன மலேசிய விமானத்தைத் தேட அமெரிக்க 4 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. மார்ச் 8-ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன் விமானத்தை தேடும் பணியில் 28 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அந்த விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்தில், "காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமமெரிக்க விமானங்கள் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை விமானத்தைத் தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்காக அமெரிக்க போட்டுள்ள பட்ஜெட் 4 மில்லியன் டாலர் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment