Comments

நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் விடுதலையாவதா?!, ராகுல் கடுப்பு -

rahul

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவர்கள் இருபத்து மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்ததால், அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க மூன்று நாள் கெடுவை மத்திய அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, “என் தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில் சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? ” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.