தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு குண்டாஸில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 523. இதில் முஸ்லிம்கள் 77 பேர், மீதமுள்ளவர்களில் 202 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 36 பேர் பழங்குடியினர், 43 பேர் கிறித்தவர்கள். மொத்த எண்ணிக்கையான 523 பேரில் 358 பேர் இந்த நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது 2012ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் கைதானவர்களில் 68 சதவீத பேர் மேற்சொன்ன நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த புள்ளிவிபரங்களை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்தச் சட்டங்களின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் உண்மையிலேயே குற்றமிழைத்திருந்தால் பிற சட்டங்களின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறேன். தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மீது தடுப்புக் காவல் சட்டங்களை ஏவும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையொன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுததுள்ளார்.

0 comments:
Post a Comment