Comments

வ.களத்தூரில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிளை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் வ.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று (29/11/2013) காலை 9 மணிமுதல் நடத்தியது. 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வட்டார சுகாதார ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் அ.முஹம்மது இஸ்மாயில், மருத்துவணிச் செயலாளர் மன்சூர் அலி ஆகியோரின் முன்னிலையில் மமக வினர் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நோய்க்கான காரணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர். ஒவ்வொரு வீட்டின் தண்ணீர் தொட்டியும் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு நோயை உண்டு பன்னும் லார்வாக்களை கொல்லும் மருந்து அடிக்கப்பட்டது, குடியிருப்பு மாடிகளில் இருக்கும் கொசுக்களை உருவாக்கும் டயர், பிளாஸ்டிக் பொருட்கள் , தேங்காய் மட்டை ஆகியவை ஊராட்சி மன்ற துப்புணர்வு பணியாளர்களின் உதவியுடன் அகற்றப்பட்டு ஊருக்கு வெளியே எரிக்கப்பட்டது. 

முடிவில் இந்த பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த வட்டார சுகாதார ஆய்வாளருக்கும், ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளருக்கும் மமக செயலாளர் அ.முஹம்மது ரஃபீக் நன்றி தெரிவித்தார்..














புகைப்படம்: கலிலூர் ரஹ்மான்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.