Comments

முஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்!


அவசியம் முஸ்லிம்கள் இதை படிப்பதன் மூலம் தெளிவடைய முடியும் ..

ஒரு முஸ்லிம் எப்படியும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றியே ஆகவேண்டும், ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்ன வென்றால், இஸ்லாமிய பற்றுடையவர்கள், அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றக் கூடியவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையான தாடி வைப்பது பலரால் புறக்கணிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்,

அவர்களிடம், ‘நீங்கள் ஏன் தாடி வைப்பதில்லை? என்று கேட்டால், பெரும்பாலானோர்கள் இது சுன்னத்து தானே!! வைக்க வில்லை என்றால் எந்த குற்றமும் இல்லை என்று கூறுகிறார்கள், இன்னும் சிலர் மனைவி கூறுவதை கேட்டு அவர்களுக்கு கட்டு பட்டு தாடியை எடுக்கிறார்கள், இன்னும் சிலர் அதாவது மாணவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகிறார் என்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தாடியை எடுக்கிறர்கள், இன்னும் சிலர் தாடி வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது என்று தாடியை எடுக்கிறாகள். இவ்வாறு எதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு தாடியை எடுக்கிறர்கள், இப்படி தாடியை எடுப்பவர்கள் அல்லாஹ்வை விரும்பவில்லை, நபி (ஸல்) அவர்களை விரும்பவில்லை, மாறாக அவர்களுடைய மனைவிமார்களையும், பெற்றோர்களையும், தன்னுடைய வேலையையும் தான் விரும்புகிறார்கள், அது மட்டும் அல்ல நபி (ஸல்) அவர்களை பின்பற்றாமல் மாறு செய்கிறார்கள்.
நபி (ஸ்ல) அவர்களை விரும்பாதவர் முஃமினாக முடியாது, விரும்பவேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாவிட்டால் அவர்களை ‘காஃபிர்கள்’ என்றும் அவர்களை அல்லாஹ் விரும்ப மட்டன் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அது மட்டும் அல்ல தாடியை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது.
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

“இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

“மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் ( 435 )

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் ‘தாடிகளை வளர விடுங்கள்’ என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.

ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

About QUILLERZ TRENDZZ

1 comments:

  1. மில்லத் நகரில் பெயரில் வலைத்தலம் பாரட்டுக்குரியது..ஆனால் கடந்த 2 மாதமாக சரியாக செயல் படவில்லை. இனிமெலவது சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.