Comments

இந்திய தேசத்தின் தன் மானம் காக்கப் பாடுபட்டவர்கள் யார் ?






ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்)

Ø  இந்திய தேசத்தின் தன் மானம் காக்கப் பாடுபட்டவர்கள் யார் ?


Ø  இந்திய தேசத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக உயிரை பணயம் வைத்துப் பேரிட்டவர்கள் யார் ?

Ø  இந்திய தேசத்தின் விடுதலைக்காக மொத்தப் பொருளாதாரத்தையும் வழங்கிய வள்ளல்கள் யார் ?




ஓர் நினைவூட்டும் மடல் !


போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்து சுதந்திர இந்தியாவை உருவாக்க அதிக கவனம் செலுத்தினர்.

ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உப்புசத்தியாக்கிரஹங்கள் என்று அஹிம்சா வழியியிலான அனைத்துப் போராட்டங்களை நடத்திப்பார்த்தும் அவைகளுக்கு மதிப்பளிக்காத வெள்ளையர்கள் மாமன்னர் பகதூர்ஷாவின் ராணுவப் புரட்சியில் நிலை குலைந்தனர்.

மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.

ஆதாரம்:-

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக நம்வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! - என்று சபதமேற்றார். தினமணி சுதந்திர பொன்விழா மலர் பக்கம். 69.

மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருந்ததால் அரசின் ராணுவத்தை எதிரிகளை நோக்கித் திருப்பி விட்டார். சுபாஷ் சந்திரபோஸ் அவர்களோ ஆட்சி அதிகாரத்தில் இல்லாத தனி நபர் என்பதால் பிரித்தானிய வல்லரசை எதிர்த்து நிற்கக் கூடிய அளவிற்கு வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்காக பெரும் செல்வந்தர்களிடம் நிதித்திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துப் போரிடுவதற்காக ஒருங்கிணைந்த இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் முஸ்லீம்கள் பர்மா நோக்கி விரைந்தனர். அவர்களது மொத்தப் பொருளாதாரத்தையும் இந்திய தேசிய ராணுவத்திற்காக வாரி வழங்கினர் விடுதலைப் போரில் கொல்லப்படுவதை பெரும் பாக்கியமெனக் கருதினர்.

ஆதாரம்:

You give me blood and I will give you Freedom என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுத்தபோது அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர். நேதாஜி 1943 ஜுலை 2 இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும் கரீம்கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.
கே. அருணாசலம்,  ஜெய்ஹிந்த்,  பககம்67 மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி மேற்படி பக்கம் 91.
சிங்கப்பூர், மலேசியப் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச சென்றவர்கள் தாயகம் திரும்பி வந்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்காமல் கூட அங்கிருந்தே பல முஸ்லீம்கள் தங்களை நேரடியாக இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்துக் கொண்டனர், இவ்வாறு முஸ்லீம்கள் தேசப்பற்றின் காரணமாக தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களின் மொத்தப் பொருளாதாரத்தையும் வாரி வழங்கி வெள்ளையர்களின் ராணுவத்திற்கு நிகரான ராணுவமாக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினர். அதனால் அது வெள்ளையர்களின் உறக்கத்தைக் கலைக்கும் சிம்ம சொப்பனமாக மாறியது.

ஆதாரம்:-

1943 ஜுலை 2 - ஆம் தேதி சிங்கப்பூரில் இந்திய தேசிய தற்காலிக சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவ்வரசின் நிர்வாக செலவிற்காக ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர்,மலேசியா,  பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். 

வருகை தந்த வியாபாரப் பெருமக்கள் எங்கள் வருமாணத்தில் பத்து சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம் என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி அவர்கள் சற்று கோபத்துடன்>தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் பத்து சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா ரத்தம்  சிந்துகின்றனர்? நீங்கள்  கணக்குப் பார்க்கின்றிரீர்களே ! என்று பேச ! கூட்டத்தில தொப்பி தாடியுடன் இருந்த முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வந்து நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்– என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக
இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.

ஜெயமணி சுப்பிரமணியம்,  நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம்,  பக்கம் 181
கே. அருணாசலம்,  ஜெய்ஹிந்த்,  பக்கம் 86.

உனது நெருக்கடியான நேரத்தில் உனது நன்பனை தெரிந்து கொள் ! என்றுக் கூறுவார்கள்.

இந்தியாவின் வரலாற்றில் அதன் நெருக்கடியான நேரம் என்று ஒன்றிருந்தது என்றால் அது வெள்ளையர்களின் அடக்கு முறைக்குள்ளான காலகட்டம் என்பதை அனைவரும் அறிவர்.

அவ்வாறான நெருக்கடியான காலகட்டத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை தனது வாரிகளுக்குக் கூட சிறிதை விட்டு வைக்காமல் அனைத்தையும் தேச விடுதலைக்காக தியாகி ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிக் கொடுத்ததனால் அவரைசேவக் கி ஹிந்த்  (இந்தியாவின் சேவகர்) என்று நேதாஜி அவர்கள் பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கண்ணீர் மல்கக் கூறி ஆரத்தழுவினார்.

Ø  பூரண சுதந்நதிரம் அடைவதற்காக இந்தியாவின் நெருக்கடியான காலகட்டத்தில் வாரி வழங்கி இன்னுயிரை நீத்த தியாகிகளின் இறையில்லத்தை (பாபர் மஸ்ஜிதை) இடித்து விட்டு தங்களை கரசேவகர்க்ள என்று சொல்லிக் கொண்டவர்களும்.

Ø  நான் மட்டும் முதலமைச்சராக இருந்திரா விட்டால் இன்னேரம் முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கூண்டோடு ஒழித்திருப்பேன் என்று உசுப்பேற்றி விட்டு பல்லாயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை பெண்கள், குழந்தைகள் என்றுக் கூடப் பார்க்காமல் கொன்றொழித்த மோடி வகையறாக்களும்,  தாக்கரே வகையறாக்களும்.

Ø  முஸ்லீம்களுக்கு சிறிதளவு அரசு ஒதுக்கிக்கொடுத்த இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றங்களில் அப்பீல் செய்தவர்களும் இதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து வீர தீரத்துடன் முஸ்லிம்கள் போரிட்டதால் அவர்களுக்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது, ஏற்கனவே இந்திய தேசிய ராணுவம் உருவாக்குவதற்காக மொத்தப் பொருளாதாரத்தையும் வாரி வழங்கியதால் உயிர் நீத்த உத்தமர்களின் குடும்பங்கள் அன்றே வீதிக்கு வரத்தொடங்கின.  


ஆதாரம்:-

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. குஷ்வந்த்சிங்,  இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.

ஆனால்
இந்தியாவை யார் ஆண்டாலும் நமக்கு கவலை இல்லை நமக்கு அரசவையின் அமைச்சரவையில் இடம் கிடைத்தால் போதும் என்பதில் மட்டும் ஆரியர்கள் கவனம் செலுத்தினார்கள்.

வெள்ளையர்களின் மொழி முதல், உடை வரையிலான அனைத்தையும் முஸ்லீம்கள் வெறுத்து ஒதுக்கியதால் வெள்ளையர்களுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லாமல் அவர்களிடமிருந்து முஸ்லீம்கள் தூர விலகிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர்களிடமிருந்து முஸ்லீம்கள் தூர விலகிச் சென்றுக் கொண்டிருந்ததால் ஆரியர்கள் ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களுடைய அமைச்சரவையில் வெகுவாக இடம் பிடித்துக் கொண்டனர். அதனால் இன்று முழு சுதந்திர இந்தியாவின் அரசுக் கேந்திரங்கள் அவர்களின் முரட்டுப் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்டது

பொருளாதாரத்தை வாரி இறைத்து, உயிரைப் பணயம் வைத்துப்போராடி தாய் மண்ணிலிருந்து ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட முஸ்லீம் தியாகிகளின் வாரிசுகள் ஆரியர்களின் நயவஞ்சகத்தனத்தால் பாதி பாகிஸ்தானிலும், மீதி அன்னிய நாட்டில் வேலைத் தேடித் திரிபவர்களாக ஆனார்கள்.!

இந்த நேரத்தில் நாம் ஏன் இதை நிணைவுப் படுத்துகின்றோம் ?

இது ஆகஸ்ட் 15ம் அல்ல !
ஜனவரி 26ம் அல்ல !

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.ம்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.