Comments

உலக செய்தி

ஹாஜிகளுக்கான சேவையில் இந்தியா பிரடர்னிடி ஃபோரம்!

சவுதியில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலப்பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் என பல தளங்களில் தன்னார்வ தொண்டு பணிகளை இந்தியா பிரடர்னிடி போரம் (IFF) செய்து வருகின்றது.
அதுபோன்று ஹஜ்ஜுடைய காலங்களில் இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்குத் தேவையான உதவிகளையும் கடந்த 11 வருடங்களாக செய்து வருகின்றது. இந்திய ஹாஜிகள் ஹஜ்ஜுடைய நாட்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஹஜ் விழிப்புணர்வு கையேடு தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் உருது ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் கேரளத்தில் நடைபெற்ற ஐ.எஃப்.எஃப் ஹஜ் வழிகாட்டி முகாமையொட்டி கேரள முதல்வர் உம்மன்சாண்டி இக் கையேட்டை வெளியிட்டார்.
இந்த விழிப்புணர்வு முகாம் கேரளத்தில் 5 இடங்களிலும் கர்நாடகாவில் ஒரு இடத்திலும் நடைபெற்றது. தமிழ் மற்றும் உருது கையேடுகள் விமான நிலையத்தில் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பல ஹாஜிகள் பயன்பெறுவார்கள்.
மக்கா, மதினா, அரபா, முஸ்தலிபா மற்றும் மினா போன்ற பகுதிகளில் இந்திய ஹாஜிகளுக்கு உதவுவதற்காக ஐ.எஃப்.எஃப் ன் தன்னார்வ குழுக்கள் ஆயத்த நிலையில் உள்ளார்கள்.
இத்தன்னார்வ பணிக்காக ஜித்தா, தாயிப், தம்மாம், ரியாத், அப்ஹா போன்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரம், ராஜஸ்தான், உ.பி, பீகார், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியை சார்ந்த உறுப்பினர்கள் வருகைதர உள்ளார்கள். இவ்வருடம் 1000 தொண்டர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டுபுரிவதற்கான பயிற்சி வகுப்புகள் ஐ.எஃப்.எஃப் மூலம் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இவ்வருடம் விருப்பமுள்ள பொதுமக்களும் பங்குபெறும் பொருட்டு பொது மக்களுக்கான பயிற்ச்சி வகுப்புகள் ஜித்தா- ஸரபிய்யாவிலுள்ள இம்பாலா கார்டனில் 19 ம் தேதி வெள்ளி மாலை 4 மணிக்கு நடத்தப்பட உள்ளன.
ஐ.எஃப்.எஃப் ன் பெண்கள் அணியினர் மற்றும் மாணவ அணியினர் கடந்த வருடத்தைவிட இவ்வருடம் அதிகளவில் பங்குபெற உள்ளார்கள். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.
இவ்வருடம் நெரிசல் மிகுந்த இடங்களான ஜம்ராத், அரபா மற்றும் முஸ்தலிபா போன்ற பகுதிகளில் சிறப்பு கவனம் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேர உதவிக்கான கூடாரமும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஐ.எஃப்.எஃப் உருவாக்கிய வரைபடத்தை (ஆயுக) இந்திய துணைதூதரகம், ஏனைய அண்டை நாட்டு ஹஜ் மிஷன்களும் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஃப்.எஃப் இச்சீரீய பணியை வாமி, இந்திய துணைதூதரகம், முத்தவப் மற்றும் ஏனைய அங்கீகரிகப்பட்ட ஹஜ் மிஷன்களுடன் ஒன்றிணைந்து செய்து வருகின்றது. இந்த பணிக்காக ஐ.எஃப்.எஃப் ஹஜ் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளராக பொறியாளர் முத்தஸ்ஸர், உதவி ஒருங்கிணைப்பாளராக அப்துர் ரவுப், தொண்டர் அணி தலைவராக முஹம்மது அலி, ஊடகத்துறை பொறுப்பாளராக அமீர் சுல்தான், லாஜிஸ்டிக்ஸ் பொறுப்பாளராக சி.வி. அஸ்ரப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.