Comments

அறிவிப்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பாட நூல், மடிக்கணினி உள்பட பல்வேறு உதவிகளை மத்திய- மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்,
சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகைகள் விவரம் வருமாறு-
நாடு முழுவதும் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர்,புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்ஸி வகுப்பினர் ஆகியோர் சிறுபான்மையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு 1-ம் வகுப்பு தொடங்கி தொழில் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வித் தொகையை வழங்குகின்றன.
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை, பள்ளி மேற்படிப்புகல்வி உதவித்தொகை மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஆகிய 3 திட்டங்களின் கீழ்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசுபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு தொடங்கி10-ம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற தகுதியாக 1-ம் வகுப்பு நீங்கலாக முந்தைய ஆண்டில் பள்ளி இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.1-ம் வகுப்பு தொடங்கி 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 6-ஆம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்புவரை ஓர் ஆண்டு சேர்க்கை கட்டணத்துக்காக ரூ.500/-, கல்வி கட்டணத்துக்காக ரூ.3,500/- வழங்கப்படுகிறது.
இவை தவிர விடுதியில் தங்கி படிப்பவராக இருந்தால் விடுதிக் கட்டணமாகரூ.600/ம், வீட்டிலிருந்து பள்ளிக்கு வருபவர்களாக இருந்தால் ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.
www.bombomw.tn.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சாதிச் சான்றிதழ்,வருவாய் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

About super

0 comments:

Post a Comment

Powered by Blogger.