Comments

உ.பி மருத்துவமனை அலட்சியம்

tamizl-news-india 002223

உ.பி மாநிலத்தில் உள்ள மீரட் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை அதிக சூடு காரணமாக இறந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முசாபர்நகரை சேர்ந்தவர் வாசீம். இவரது மனைவி இஷ்ரத்துக்கு கடந்த டிசம்பர் 25ம் தேதி குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைவாக இருந்தது. இதன் காரணமாக டிசம்பர் 27 அன்று குழந்தையை மீரட் மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு மாற்றினர். அங்கு குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.
இன்குபேட்டர் சூடு அதிகமான காரணத்தால் குழந்தையின் கழுத்து கருகத் தொடங்கியது. குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த நோயாளி சத்தம் போட்டதால் இன்குபேட்டரில் இருந்த குழந்தை மீட்கப்பட்டது. ஆனாலும் 70 சதவீத தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க தலைமை மருத்துவர் சுபாஷ் தலைமையில் 3 நபர் குழுவை அமைத்து மருத்துவ கல்லூரி முதல்வர் பிரதீப் பாரதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மின்சார கசிவு காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கல்லூரியின் நிறுவனர் டாக்டர் அமித் பதக் கூறியுள்ளார். மருத்துவர்கள் அலட்சியம் காரணமாக புதிதாக பிறந்த குழந்தை இறந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

About Jiyavudeen Abdul Subhahan

0 comments:

Post a Comment

Powered by Blogger.